OUR CLIENTS
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சந்திப்பு
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சந்திப்பு Posted on 12-Dec-2017 குடியரசுத்தலைவர்   ராம்நாத் கோவிந்த் உடன்  சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சந்திப்பு

புதுடெல்லி, டிச.12
சீனா - இந்தியா - ரஷ்யா இடையேயான முத்தரப்பு கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி சந்தித்து பேசினார். புதுதில்லி ராஷ்டிரபதி பவனில், குடியரசுத்தலைவர்    ராம்நாத் கோவிந்த்தை சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி   நேற்று  சந்தித்து பேசினார்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் புதுடெல்லியில் நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் கொரியா போன்ற நாடுகளில் நிலவும் பயங்கரவாதம் தொடர்பாக இக்கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.  கூட்டத்திற்கு முன் சுஷ்வா சுவராஜ், இரு தலைவர்களுடன் தனித்தனியே சந்தித்து பேசுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் சுஷ்மா சுவராஜ், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சந்தித்தனர். 

டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு சீன தலைவர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.   இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி ராஷ்டிரபதி பவனில், குடியரசுத்தலைவர்    ராம்நாத் கோவிந்த்தை சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி   நேற்று  சந்தித்து பேசினார்.

Label