OUR CLIENTS
உள்ளாட்சி தேர்தல் வழக்கு: சென்னைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் வழக்கு: சென்னைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு Posted on 12-Dec-2017 உள்ளாட்சி தேர்தல் வழக்கு: சென்னைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை, டிச.12
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை சென்னைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

 மதுரையை சேர்ந்த ரமேஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், உறுப்பினர் பதவிகள் 24.10.2016 முதல் காலியாக உள்ளது. அரசியல் காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.  அக்டோபர் மாதம் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் சாலை அமைத்தல், அடிப்படை கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அலுவலர்களின் பதவி காலம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் விருப்பம் இல்லாததுபோல் தெரிகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு நேற்று நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அமர்வில் விசாரணையில் உள்ளது. எனவே இந்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

Label