OUR CLIENTS
ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது
ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது Posted on 12-Dec-2017 ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது

சென்னை, டிச. 12
ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் 5 பேரை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். இதனைக் கண்டித்து ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள்  போராட்டம் நடத்தினர். 

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாழ்வா? சாவா என அரசியல் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதிலும் மும்முரமாக இருக்கின்றன கட்சிகள். 

தினகரன் தரப்பில் ஒரு வாக்காளருக்கு ரூ.8,000 தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 தினகரன் ஆதரவாளர்களை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். இதனைக் கண்டித்து நேற்று தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் போராட்டம் நடத்தினர். 

Label