OUR CLIENTS
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா Posted on 12-Dec-2017 நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா

சென்னை, டிச.12
நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேட்சையாக மனு தாக்கல் செய்ததால் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார். திரை உலக வட்டாரங்களில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
 
விஷாலின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பொன்வண்ணன் ராஜினாமா செய்தார் எனவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 இது குறித்து பொன்வண்ணன் கடிதத்தில் கூறியதாவது:-  நடிகர் விஷாலின் அரசியல் செயல்பாடு குறித்து பலரும் கேள்விகள் கேட்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றபோது எந்த கட்சியையும் சாராத நிர்வாகம் அமைய வேண்டும் என விரும்பினோம்.

ஆனால் தற்போது எல்லா கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சங்கத்தில் உள்ளனர். நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல் என கடிதத்தில் நடிகர் பொன்வண்ணன் கூறி உள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைவராகவும், பொன்வண்ணன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.


Label