OUR CLIENTS
ஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது லக்கானியிடம் தினகரன் புகார்
ஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது லக்கானியிடம் தினகரன் புகார் Posted on 12-Dec-2017 ஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது  லக்கானியிடம் தினகரன் புகார்

சென்னை, டிச.12
ஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது செய்யப்படுவதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்.கே நகரில் வரும் 21–ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, டிடிவி தினகரன் நேற்று சந்தித்தார்.  

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பேசியது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் தினகரன் கூறினார்.  ஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்களை காரணமின்றி காவல்துறையினர் கைது செய்கின்றனர். உண்மையாகவே தேர்தல் சரியாக நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  ஆர்.கே.நகரில் அதிகாரிகள், காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தொண்டர்கள் மீது காரணமின்றி கைது தொடர்ந்தால் காவல்துறை மீது நீதிமன்றத்தில் புகார் செய்வோம்.  இந்த மிரட்டல்களை எல்லாம் நாங்கள் 30 வருடங்களாக பார்த்து வருகிறோம். போலீஸ் அதிகாரிகள் தங்கள் கடமையை மட்டும் செய்ய வேண்டும், மதுசூதனனுக்கு ஓட்டு கேட்பது போல் நடந்து கொள்ள கூடாது' என்று கூறினார்.

பணம் கொடுப்பதாகக் கூறி எங்கள் நிர்வாகிகளை குறிவைத்து கைது செய்கின்றனர். தீவிரவாதிகளை பிடிப்பது போல கைது செய்கின்றனர். நக்சலைட் போல நள்ளிரவில் தொண்டர்களை கைது செய்வதா? எங்கள் மீது பணப்பட்டுவாடா புகார் சொல்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இவ்வாறு, இவ்வாறு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Label