OUR CLIENTS
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்த மன்மோகன் சிங் ஏன் உத்தரவிடவில்லை : பிரதமர் மோடி கேள்வி
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்த மன்மோகன் சிங் ஏன் உத்தரவிடவில்லை : பிரதமர் மோடி கேள்வி Posted on 12-Dec-2017 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்த மன்மோகன் சிங் ஏன் உத்தரவிடவில்லை : பிரதமர் மோடி கேள்வி

வதோதரா, டிச.12
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை தயாராக இருந்தும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏன் அதற்கு உத்தரவிடவில்லை ? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பினார்.

    
குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள நாவ்லாகி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவரது உரையின் விவரம்:  இந்திய விமானப்படையில் உயரதிகாரியாக பணியாற்றிய ஒருவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவர் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளிவந்தது. அவர் என்ன கூறினார் என்றால், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் விமானப்படை அதிகாரிகள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கான திட்டத்துடன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அனுமதி பெறச் சென்றுள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அப்போதைய அரசு அதற்கு சம்மதிக்கவில்லை. யாருடைய ஆலோசனையின் படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு செய்தார்?.

ஆனால் எங்கள் அரசாங்கம் யூரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்பு பாகிஸ்தான் எல்லையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தினோம். இந்த திடீர் தாக்குதல் பாகிஸ்தானியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தரப்பில் பலர் இறந்தனர். ஆனால் நம் வீரர்கள் எந்த ஆபத்தும் இன்றி திரும்பி வந்தனர் என மோடி கூறினார்.

சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் குறித்து கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி சந்தேகம் எழுப்பியதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இதுபோன்ற ரகசிய விஷயங்களைப் பொதுமக்கள் முன்னிலையில் பேசுவது சரிதானா என கேள்வி எழுப்பினார்.  தன்னுடைய அரசுக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும் இதுதான் வித்தியாசம் என மோடி தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் அனுமதி பெறாமல் பாகிஸ்தான் பிரதிநிதிகளுடன் மணிசங்கர் ஐயர், எப்படி சந்தித்துப் பேச்சு நடத்தினார் என்று மோடி கேட்டார்.

தான் குஜராத் முதல்வராக இருந்த பொழுது எந்த வெளிநாட்டுப் பிரதிநிதியை சந்திப்பதென்றாலும் மத்திய அரசின் அனுமதியுடன் தான் சந்திப்பது வழக்கம் என்றார் பிரதமர் மோடி.


Label