OUR CLIENTS
2023-ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும்... !
2023-ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும்... ! Posted on 12-Dec-2017 2023-ம் ஆண்டு  ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும்... !

புதுடெல்லி, டிச.12
 2023ல் நடக்கும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்தும் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.


டெல்லியில் நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்திய அணி அடுத்து விளையாடும் போட்டிகளை குறித்தும் தொடர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 2023 உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் என்றும் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியையும் இந்திய அணியே நடத்தும் என்று முடிவாகியுள்ளது. 2006ல் கடைசியாக இந்தியா சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2011ல் இந்தியா உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியது. அப்போது இந்திய அணியே டோணி தலைமையில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த புதிய அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Label