OUR CLIENTS
பார் கவுன்சிலில் அரசியல் கூடாது உயர்நீதிமன்றம் கருத்து
பார் கவுன்சிலில் அரசியல் கூடாது உயர்நீதிமன்றம் கருத்து Posted on 13-Dec-2017 பார் கவுன்சிலில் அரசியல் கூடாது உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, டிச.13
பார் கவுன்சிலில் அரசியல் நுழைவதை தடுக்க, அரசியல் கட்சியில் பதவி வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.  

தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தொடர்பாக 2 பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் வக்கீல்கள் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வக்கீல்கள் பதிவு மற்றும் சட்ட கல்லுாரிகள் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பினார். இவற்றுக்கு பதிலளிக்க இந்திய பார் கவுன்சில் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:   பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வக்கீல்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், 3 ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழ் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. பார் கவுன்சிலில் அரசியல் நுழைவதைத் தடுக்க அரசியல் கட்சியில் பதவி வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களை பார் கவுன்சில் தேர்தலில் அனுமதிக்கக் கூடாது. இதை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழு முன் இந்திய பார் கவுன்சில் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை வரும் 13ம் தேதி நடக்கும்.   இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Label