OUR CLIENTS
ஆர்.கே.நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம்
ஆர்.கே.நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் Posted on 13-Dec-2017 ஆர்.கே.நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தீவிர பிரசாரம்

 ராயபுரம், டிச.13
ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது நாளாக தீவர பிரசாரம் செய்துவருகிறார்.

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.  இருவரும் தங்களது 2-ம் கட்ட பிரசாரத்தை கடந்த 9-ம் தேதி தண்டையார்பேட்டையில் தொடங்கினார்கள்.  நேற்று முன்தின்ம் அம்மினியம்மாள் தோட்டம், ஜீவா நகர், சிவன் நகர், அரசு அச்சக குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்தார்கள். அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, தங்கமணி ஆகியோர் வரவேற்றார்கள்.

3-வது நாளானநேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி சென்று விட்டதால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்கிறார்.  காலையில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் பொறுப்பில் உள்ள நேதாஜி நகர் 4-வது தெருவில் 29 மற்றும் 31-வது பூத் ஏஜண்டுகளிடம் ஆலோசனை நடத்தினார்.   மாலையில் பாட நூல் கழக தலைவர் பா.வளர்மதி பொறுப்பு பகுதியான மேயர் பாசுதேவ் தெருவில் வாக்கு சேகரிக்கிறார்.

இந்த தொகுதியில் மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஆயிரம் ஓட்டுகள் என்ற வகையில் பிரித்து அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 30 அமைச்சர்கள் தேர்தல் பணி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  30 அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தினமும் தெரு தெருவாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.


         
     

Label