OUR CLIENTS
மத உணர்வுகளை மக்களிடையே தூண்டும் வேலையை பாஜக -ஆர்எஸ்எஸ் நிறுத்த வேண்டும்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்
மத உணர்வுகளை மக்களிடையே தூண்டும் வேலையை பாஜக -ஆர்எஸ்எஸ் நிறுத்த வேண்டும்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல் Posted on 13-Dec-2017 மத உணர்வுகளை மக்களிடையே தூண்டும் வேலையை பாஜக -ஆர்எஸ்எஸ் நிறுத்த வேண்டும்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஜம்மு, டிச. 13
மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதை தேர்தல் சமயத்தில் தவறாக பயன்படுத்துவதை பாஜக – ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகள் நிறுத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார். மத கோட்பாடுகளின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் போக்கு வளர்ந்து வருவதற்கு பரூக் அப்துல்லா கவலை தெரிவித்தார்.

திங்கட்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் ஷெர் காஷ்மீர் பவன் என்ற இடத்தில் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா கலந்து கொண்டு பேசினார். அவரது உரையின் விவரம்:

இந்தியா ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமானது இல்லை. பல நிற மலர்கள் கொண்ட ஒரு அழகிய பூங்கொத்து போன்றது நம் நாடு. இங்கு அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை உண்டு.

ஆனால் தற்போது அரசியல் மற்றும் தேர்தலுக்காக மக்களை மத அடிப்படையில் பிளவுப்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மதசார்பின்மையை காக்கும் பெரும் சவாலான பொறுப்பு எங்கள் கட்சிக்கு வந்துள்ளது.

பாஜக -ஆர்எஸ்எஸ் மக்களின் உணர்வுகளை தூண்டி அதை தேர்தல் சமயத்தில் தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மகாத்மா காந்தியடிகளின் நாடான இந்தியா சில மதசார்புடைய அரசியல் கட்சிகளின் கொள்கைகளால் சிறு துண்டுகளாக சிதறக்கூடாது

நரேந்திர மோடி அனைத்து மத மக்களுக்கும் பிரதமர் ஆவார். இந்த உண்மையை மறக்கவோ மறுக்கவோ கூடாது. அரசியல் பணி காரணமாக மோடி தன் கடமையை மறந்துவிட மாட்டார் என நம்புகிறேன் என பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

குஜராத் தேர்தலில் மத அடிப்படையில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கப்படுவதை குறிப்பிட்டு பரூக் அப்துல்லா இதை தெரிவித்தார்.

மேலும் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவரை கவுரவிக்கும் அமைப்புகளிடம் இருந்து எந்த நல்ல மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்றும் பரூக் அப்துல்லா கூறினார்.


Label