OUR CLIENTS
தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தனியார் இன்டர்நெட் மையங்களை பயன்படுத்த வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்
தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தனியார் இன்டர்நெட் மையங்களை பயன்படுத்த வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் Posted on 13-Dec-2017 தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தனியார் இன்டர்நெட் மையங்களை பயன்படுத்த வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்

திருமலை, டிச. 13
திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன டிக்கெட் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள பக்தர்கள் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் இன்டர்நெட் மையங்களுக்கு செல்கிறார்கள். அங்கு, தங்களுடைய ஆவணங்களை கொடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளை செய்கிறார்கள்.

அதில் சில தவறுகள் நடந்து விடுகின்றன. பக்தர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தனியார் இன்டர்நெட் மையத்தினர் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அத்துடன் தனியார் இன்டர்நெட் மையத்தினர் பக்தர்களின் ஆவணங்களை வைத்துக்கொண்டு தேவஸ்தான சேவைகளில் சில மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரியிலேயே பக்தர்கள் நேரடியாக அனைத்துத் சேவைகளுக்கும் முன்பதிவு செய்யலாம். பக்தர்கள், தனியார் இன்டர்நெட் மையங்களில் முன்பதிவு செய்ய வேண்டாம். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. பக்தர்கள் தங்களின் செல்போன்கள் மூலமாக தேவஸ்தானத்தின் பல்வேறு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக பக்தர்களுக்கு தேவஸ்தான இணையதளத்தில் வசதிகளை செய்து கொடுக்க அனைத்துத் திட்ட அதிகாரிக்கும் உத்தரவிடப் பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. அந்தந்த மொழிகளில் தொடங்கப் பட்டுள்ள இணையதள சேவையில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அனில்குமார் சிங்கால் கூறினார். 

Label