OUR CLIENTS
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் மாயம்: மீட்பு பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் மாயம்: மீட்பு பணி தீவிரம் Posted on 13-Dec-2017 ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் மாயம்: மீட்பு பணி தீவிரம்

ஸ்ரீநகர், டிச. 13
ஜம்மு-காஷ்மீரில் பனிச் சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரோஷ் செக்டாரில் நேற்று முன்தினம் இரவு திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. குரேஷ் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பக்தோர் என்ற ராணுவ நிலை பனிச்சரிவில் சிக்கியது. இதில் மூன்று ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.

பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்து பனிப்பொழிவு இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
நேற்று பனிச்சரிவு ஏற்பட்ட பகுதி வழியாக சென்ற ராணுவ சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரும் காணாமற் போனதால் தேடப்படுகிறார்.

Label