OUR CLIENTS
3,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மியின் உடல்: மன்னராக இருக்கலாம் என தகவல்
3,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மியின் உடல்: மன்னராக இருக்கலாம் என தகவல் Posted on 13-Dec-2017 3,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மியின் உடல்: மன்னராக இருக்கலாம் என தகவல்

எகிப்து, டிச. 13
எகிப்தில் 3,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பில், கண்டுபிடிக்கப்பட்டவர் மன்னராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எகிப்தின் மேற்கு கரை பகுதியில் உள்ள லக்ஸோரின் தரா அபுல் நாகா நெக்ரோபோலிஸ் என்ற இடத்தில் ஜேர்மனி அகழ்வாராய்சியாளர் பிரடெரிக்கா கம்ப் என்பவர் தான் இந்த கல்லறையை கண்டுபிடித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்லறைகள், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் எனவும், இது 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தக் கல்லறையிலிருந்து சிதைந்த நிலையில் மம்மி ஒன்றும், ஏராளமான சுடுமண் சிற்பங்களும், பழங்கால ஓவியங்கள் அடங்கிய பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கல்லறையில் மம்மியாக கண்டெடுக்கப்பட்டவர் மன்னராக இருக்கலாம். எலும்புத் துண்டுகளாக இருந்தவர்கள் பணியாட்களாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label