OUR CLIENTS
பாகிஸ்தான் நிதி அமைச்சர் தலைமறைவு பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு
பாகிஸ்தான் நிதி அமைச்சர் தலைமறைவு பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு Posted on 13-Dec-2017 பாகிஸ்தான் நிதி அமைச்சர் தலைமறைவு  பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு

இஸ்லாமாபாத், டிச.13
பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பாகிஸ்தான் நிதி அமைச்சரான இஷாக் தர் (67) தலைமறைவாகிவிட்டதாக நேற்று அறிவித்தது. முறைகேடாக சொத்துக்கு வித்த வழக்கில் நேரில் ஆஜராகாமல் தொடர்ந்து விசாரணையை தவிர்த்து வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் நிதி அமைச்சரான இஷாக் தர் மீது வருமானத்தை மீறி சொத்துச் சேர்த்ததாக வழக்குப் பதிவானது. அவர் மீதான விசாரணை பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  ஆனால் கடந்த அக்டோபர் மாதம் முதல் இஷாக் தர் இதய நோய்க்காக லண்டனில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இஷாக் தர்ரின் வழக்கறிஞர் அவரது மருத்துவ ஆவணங்களை நேற்று நீதி மன்றத்தில் சமர்பித்தார். அமைச்சர் இஷாக் தர் தலை மறைவானவராக அறிவிக்க வேண்டாம் என்று அவரது வழக்கறிஞர் கோரினார். ஆனால் எதிர்தரப்பு வழக்கறிஞர் சமர்பிக்கப் பட்ட ஆவணங்கள் ஒன்றுக்கொன்று முரண் பட்டுள்ளதாக குற்றம் £ட்டினார்.  இறுதியில் பாகிஸ்தான் நீதிமன்றம், அமைச்சர் இஷாக் தர்  ‘தலைமறைவாகிவிட்டவர்’ என அறிவித்தது. மேலும் அவர் மீதான உறுதி பத்திரங்கள் மூன்று நாட்களுக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் மீறினால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என எச்சரித்தது

Label