OUR CLIENTS
பிரான்ஸை கடுமையாக தாக்கும் கிழிகி புயல் :பொதுமக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை
பிரான்ஸை கடுமையாக தாக்கும் கிழிகி புயல் :பொதுமக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை Posted on 13-Dec-2017 பிரான்ஸை கடுமையாக தாக்கும் கிழிகி புயல் :பொதுமக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

பிரான்ஸ், டிச.13
பிரான்ஸில் கடுமையான காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசாங்கம் எச்சரித்துள்ளது. 

சாரண்டிஸ் கடலோரப் பகுதிகளில் மேற்கு நோக்கி வீசும் புயலால் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தென்மேற்கு பகுதிகள் கடுமையான சூறாவளி காற்றுக்கு ஆளாகக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய வானிலை எச்சரிக்கையான ’Orange Alert'
விடுக்கப்பட்டுள்ள நிலையில் 34 பாதுகாப்புத் துறைகள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 
சூராவளி காற்று வீசி வருவதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து அவரவர் இல்லத்திலேயே தங்கி விடும்படி அறிவு றுத்தப்பட்டுள்ளது. 

மேலும் 120,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 90,000 வீடுகள் Pays dela Loire
  பகுதியை சேர்ந்தது என்றும் Endis 
 மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனால் ஏற்படக்கூடிய பெரும் அசம்பாவிதங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக, பொதுமக்கள் மற்றும் குறிப்பாக கடலோரப்பகுதி மக்கள் தகுந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கையுடன் இருக்கும்படி பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது. 

Label