OUR CLIENTS
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி Posted on 13-Dec-2017 புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

கனடா, டிச. 13
கனடாவின் கிரேட்டர் மான்ட்ரியல் பகுதியல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது. 

Leucan சங்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 200 புற்றுநோய் பாதித்த குழந்தைகள், 200 பெரியவர்கள் என 400 நபர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகளுக்காக சிறப்பு பரிசு பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு சாண்டா கிளாஸ் போன்ற ஏற்பாடுகளை  Leucan சங்க இயக்குநர் Carol Beaudry பொறுப்பேற்று செய்திருந்தார். 

விழாவில் கலந்துகொண்ட Claudio Campilii என்னும் பெண் கூறுகையில், ”அன்றாட வாழ்க்கையில் இருந்து சற்று மாற்றாக அமைந்த இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. 

எனது ஆறு வயது குழந்தையான kayla விற்கு Wilms tumour எனப்படும் சிறுநீரக புற்றுநோய் ஏற்பட்டது 15 மாதத்திற்கு முன் கண்டறியப்பட்டது. 

பலகட்டமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டும் புற்றுநோய் நோய் சரியாகவில்லை. எங்கள் வாழ்க்கையின் மிகவும் சோதனையான காலக்கட்டத்தில் இருப்பதால் இந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்டாடியிருப்போமா என்பது சந்தேகம் தான். 

ஆனால் எங்களை அழைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட வைத்த இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது, அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார். 

Label