OUR CLIENTS
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலி வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலி வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு Posted on 14-Dec-2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலி வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

சென்னை, டிச.13
ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள போலி வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்களிக்காமல் தடுக்க பொருத்தமான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி வாக்களர்கள் மீதும், அவர்களை சேர்க்க துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள 45,000 போலி வாக்காளர்களை நீக்கும்வரை தேர்தல் நடத்தத் தடை கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் சார்பில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் 5,177-க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை நீக்காமல் உள்ளதால், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையொட்டி கடந்த திங்கள்கிழமை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 2.25 லட்சம் உள்ள தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் இருந்தனர் என்பது மிகவும் அபாயகரமானது என்று தெரிவித்தனர். ஒருமுறைக்கு மேல் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மீதும், அதற்குத் துணையாக இருந்தவர்கள் மீதும் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த 5,177 போலி வாக்காளர்களை உடனடியாக நீக்க முடியவில்லை என்றால், தரம்பிரித்து அவர்கள் வாக்களிக்க முடியாதபடி அவர்களின் பட்டியலை அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் அனுப்ப உத்தரவிட்டார். இதனையடுத்து போலி வாக்காளரை நீக்கும் திமுகவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் அமர்வு வழக்கை முடித்துவைத்தது.

Label