OUR CLIENTS
இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் அன்னா ஹசாரே நம்பிக்கை
இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் அன்னா ஹசாரே நம்பிக்கை Posted on 14-Dec-2017 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் அன்னா ஹசாரே நம்பிக்கை

ஆக்ரா, டிச. 14
தன்னுடைய போராட்டங்களின்மூலம் மற்றொரு கெஜ்ரிவால் இனி உருவாகமாட்டார் என்று நம்புவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011ஆம் ஆண்டு டில்லியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் தற்போதைய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். பின்னர் அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து விலகி ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி  டில்லி முதலமைச்சராக பதவிவகித்து வருகிறார்.

இந்நிலையில் ஆக்ராவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அன்னா ஹசாரே கலந்து கொண்டு பேசினார். இதில் பேசிய அன்னா ஹசாரே ”வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பெரிய அளவிலான போராட்டம் நடைபெறவுள்ளது.

 இந்த போராட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், ”ஜன் லோக்பால் மசோதாவை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வர மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து வந்த பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடியின் அரசு ஜன்லோக்பால் மசோதாவை நீர்த்துபோகும்படி செய்துவிட்டது.
காங்கிரஸும், பாஜகவும் இரண்டு குற்றவாளிகள். மோடி மற்றும் ராகுல் ஆகிய இருவரும் இல்லாத ஒரு அரசாங்கம் நம் நாட்டிற்கு வேண்டும். முதலாளித்துவ அரசாங்கத்தை நாங்கள் விரும்பவில்லை.

விவசாயிகளின் நலனுக்காக செயல்படும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார். ”இனி வரும் என்னுடைய போராட்டங்களில் இருந்து மற்றொரு கெஜ்ரிவால் உருவாக வாய்ப்பில்லை என்று நம்புகிறேன்” என்று அன்னா ஹசாரே கூறினார்.

Label