OUR CLIENTS
ஏர் டெக்கன் விமான நிறுவனம் ரூ.1க்கு விமான சேவை வழங்க திட்டம்
ஏர் டெக்கன் விமான நிறுவனம் ரூ.1க்கு விமான சேவை வழங்க திட்டம் Posted on 14-Dec-2017 ஏர் டெக்கன் விமான நிறுவனம் ரூ.1க்கு விமான சேவை வழங்க திட்டம்

புதுடெல்லி, டிச. 14
ஏர் டெக்கன்  எனும் விமான நிறுவனம், ஒரு ரூபாய்க்கு விமான சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.

“சாமானியனும் விமானத்தில் பறக்கட்டும்” 
என்ற நோக்கத்தை வலியுறுத்தும் மத்திய அரசின் 
உடான் திட்டத்தின் கீழ், உள்நாட்டு விமானப் 
போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரப் பயண தூரம் கொண்ட விமான 
சேவைக்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாய் 
என்ற அடிப்படைக் கட்டணத்தில் விமான 
சேவையை பல நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.

ஏற்கெனவே மிகக் குறைந்த கட்டணத்தில் 
விமான சேவை வழங்கி புகழ் பெற்ற ஏர் டெக்கன் எனும் விமான நிறுவனமும் மும்பை, 
டெல்லி, கொல்கத்தா, சில்லாங் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வழித்தடங்களில் ஆயிரத்து 400 ரூபாய் 
என்ற அடிப்படைக் கட்டணத்தில் வரும் 22-ம் தேதி முதல் சேவை வழங்குகிறது. அதிர்ஷ்டமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய் 
கட்டணத்தில் விமான சேவை வழங்க இருப்பதாக ஏர் டெக்கன் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Label