OUR CLIENTS
தினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
தினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்! Posted on 14-Dec-2017 தினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

புதுடெல்லி, டிச.14
இரட்டை இலைச்சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரனுக்கு எதிராக டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஆர் நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.   இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும், டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த ஏப்ரல் 26ம் தேதி தினகரனை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.  இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தினகரன் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

டெல்லி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.  இதில் தினகரனின் நண்பர்களான மல்லிகார் ஜூனா, இடைத்தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச்சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Label