OUR CLIENTS
ராஜினாமாவை வாபஸ் வாங்கினார் பொன்வண்ணன்!
ராஜினாமாவை வாபஸ் வாங்கினார் பொன்வண்ணன்! Posted on 14-Dec-2017 ராஜினாமாவை வாபஸ் வாங்கினார் பொன்வண்ணன்!

சென்னை, டிச.14
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைர் பதவியில் இருந்து விலகுவதாக பொன்வண்ணன் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல். நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது என பொன்வண்ணன் கடிதத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

பதவிக் காலத்தை முடிக்காமல் விலகுவதில் வருத்தமிருந்தாலும், இந்நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக பொன்வண்ணன் வருத்தம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் எனது ராஜினாமாவை வாபஸ் வாங்கும்படி சங்கத்தின் தலைவர் நாசர் வலியுறுத்தினார். இதை ஏற்று, எனது முடிவை மாற்றிக் கொண்டு, ராஜினாமாவை வாபஸ் வாங்கி, எனது பதவியை தொடரப் போகிறேன். விஷால் தேர்தலில் நிற்பது அவரது தனிப்பட்ட விருப்பம், நடிகர் சங்க பதவியில் இருந்து விலகி விட்டு, விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது" என்றார் பொன்வண்ணன்.  

Label