OUR CLIENTS
ஆர்.கே. நகரில் அனுமதியின்றி நுழையும் வாடகைக் கார்கள் பறிமுதல் :தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
ஆர்.கே. நகரில் அனுமதியின்றி நுழையும் வாடகைக் கார்கள் பறிமுதல் :தேர்தல் ஆணையம் எச்சரிக்கை Posted on 14-Dec-2017 ஆர்.கே. நகரில் அனுமதியின்றி நுழையும் வாடகைக் கார்கள் பறிமுதல்  :தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை,டிச. 14
ஆர்.கே.நகரில் உரிய அனுமதியின்றி நுழையும் வாடகைக் கார்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஓலா, உபேர், என்.டி.எல். நிறுவனங்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிக்கை அனுப்பியுள்ளார். ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதியின்றி தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்.கே.நகர் தொகுதிக்குள் உரிய அனுமதி பாஸ் இன்றி நுழையும் வாடகை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், இதனை அந்தந்த நிறுவனங்கள் தங்கள் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்து மாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

Label