OUR CLIENTS
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு Posted on 14-Dec-2017 போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு  முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு

சென்னை, டிச.14
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அருள்மொழி என்பவர் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி மீதான விசாரணை முடிவடையவில்லை எனக் கூறி. முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த போலீசார், விசாரணை முடியும் வரை துன்புறுத்த மாட்டோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி தேவைப்பட்டால் காவல்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Label