OUR CLIENTS
உடல் மெலிய லட்சுமிமேனன் அறுவை சிகிச்சை
உடல் மெலிய லட்சுமிமேனன் அறுவை சிகிச்சை Posted on 14-Dec-2017 உடல் மெலிய லட்சுமிமேனன் அறுவை சிகிச்சை

நடிகைகள் தங்கள் தோற்றத்தை ஸ்லிம்மாக அதாவது ஒல்லியாகவும் கவர்ச்சியாகவும் பராமரிக்க படாதபாடுபடுகின்றனர். கோடிக்கணக்கில் சம்பாதித்தும் உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் ஸ்பூனில் சாப்பிடும் நிலைதான் உள்ளது. ‘கும்கி’ பட ஹீரோயின் லட்சுமிமேனன் உடல் தோற்றம் பற்றி கவலைப்படாமல் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் மிகவும் குண்டானார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. அவருக்கு பிறகு வந்த நடிகைகள் அவரை முந்திச் சென்றனர். அஜீத் நடித்த வேதாளம் படத்தில் தங்கையாக நடித்தார் லட்சுமிமேனன். இதனால் அவரது ஹீரோயின் இமேஜ் பாதித்தாக கூறப்பட்டது. யங் மங் சங் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

குண்டான உடல் தோற்றத்தை குறைக்க உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி, யோகா என பல முயற்சிகளை மேற்கொண்டார் லட்சுமிமேனன். ஓரளவுக்குத்தான் எடை குறைந்தது. ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைக்க கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. 

சில தினங்களுக்கு முன் கேரளாவில் சோட்டானிக்கரை அம்மன் கோயில் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார் லட்சுமிமேனன். ஒல்லிபிச்சான் தோற்றத்தில் இருந்த அவரை யாரும் அடையாளம் காணமுடியவில்லை. 

ஆனால் ஓட்டல் ஓனர் அவரை அடையாளம் கண்டுகொண்டு வரவேற்றதுடன் உடனிருந்து செல்பி படம் எடுத்து அதை இணைய தளத்தில் பகிர்ந்தார். அதில் லட்சுமிமேனன் ஒல்லி யான தோற்றத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் இது லட்சுமி மேனன்தானா என்று கண்களை அகல விரித்து பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். ஒல்லியாகிவிட்டால் மட்டும் போதுமா கவர்ச்சியாகவும் நடிக்க துணிந்தால்தான் லட்சுமிமேனனால் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என்று கோலிவுட்டில் முணுமுணுக்கின்றனர்.

Label