ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருக்குலைந்த 6 கிராமங்கள் Posted on 14-Dec-2017
ஈரான், டிச. 14
ஈரானில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6 புள்ளி 2 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் தரைமட்டமானதால் 18 பேர் காயம் அடைந்தனர். மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் கெர்மான் மாகாணத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுமார் எட்டு லட்சம் பேர் வசிக்கும் இப்பகுதியில் நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்காக அவசர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக 6 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து அப்பகுதியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.