OUR CLIENTS
உலகின் வலுவான அணு ஆயுத சக்தி கொண்ட நாடாக வடகொரியாவை மாற்றுவேன் :கிம் ஜாங் உன்
உலகின் வலுவான அணு ஆயுத சக்தி கொண்ட நாடாக வடகொரியாவை மாற்றுவேன் :கிம் ஜாங் உன் Posted on 14-Dec-2017 உலகின் வலுவான அணு ஆயுத சக்தி கொண்ட நாடாக வடகொரியாவை மாற்றுவேன் :கிம் ஜாங் உன்

சியோல், டிச. 14
உலகின் சக்தி வாய்ந்த அணு ஆயுத நாடாக வடகொரியாவை மாற்றுவேன் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதிபட தெரிவித்துள்ளார். 

எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டு அடாவடி செய்து வருகிறது. 

இதனால், உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது கடும் கோபத்தில் உள்ளன. ஒட்டுமொத்த அமெரிககாவும் தங்கள் தாக்குதல் இலக்குக் குள்ளாகியுள்ளதாக வடகொரியா அண்மையில் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தி விட்டு தெரிவித்தது.  இந்த நிலையில், ஏவுகணை தயாரிப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களை சந்தித்து பேசிய வடகொரிய அதிபர் கிம் காங் உன், அப்போது கூறுகையில், “ வலுவான அணு சக்தியை வெற்றிகரமாக முன்னெடுத்து சென்று உலகின் சக்தி வாய்ந்த அணு ஆயுத மற்றும் ராணுவ வலிமை மிக்க நாடாக மாறுவோம்” என கூறியதாக கொரிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Label