OUR CLIENTS
வடகொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா
வடகொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா Posted on 14-Dec-2017 வடகொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா

வாஷிங்டன், டிச. 14
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த ஒப்புக்கொண்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதசோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்கா – வடகொரியா இடையேயான வார்த்தைப் யுத்தம் பதற்றத்துக்கு வழிவகுத்தன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டில்லர்சன் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து அமெரிக்கா சீனாவுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார். வடகொரியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பினால் தென்கொரிய எல்லைகளில் உள்ள தங்கள் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள சீனா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

எனினும் வடகொரியாவுக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், அதற்கு வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை கைவிட உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Label