OUR CLIENTS
பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு சீர்குலைந்து வருகிறது- அமெ., வெளியுறவு அமைச்சர் பேச்சு
பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு சீர்குலைந்து வருகிறது- அமெ., வெளியுறவு அமைச்சர் பேச்சு Posted on 14-Dec-2017 பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு சீர்குலைந்து வருகிறது- அமெ., வெளியுறவு அமைச்சர் பேச்சு

இஸ்லாமாபாத், டிச.14
பாகிஸ்தானுடனான உறவு சீர்குலைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளர்.

வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு சிதைந்து வருவதாகவும், அதற்கு அந்த நாட்டின் தீவிரவாத ஆதரவு நிலையே காரணம் என்றும் தெரிவித்தார். தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது விரைவில் பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் தொடர்பாக பாகிஸ்தானிடம் தகவல் பரிமாற்றங்களை பெற மட்டுமே அமெரிக்க விரும்பியதாகவும், அதனை வெற்றிகரமாக பெற்றதாகவும் தெரிவித்த அவர், இனியும் அந்நாட்டுடன் உறவை தொடர விரும்பவில்லை என்றார்.

Label