OUR CLIENTS
தெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி!
தெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி! Posted on 14-Dec-2017 தெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி!

கொடைக்கானல், டிச.14
கொடைக்கானலில் 1984ம் ஆண்டு 25 ஏக்கரில் இந்துஸ்தான் யுனிலிவர் தெர்மாமீட்டர் ஆலை அமைத்தது. ஆலையில் பயன்படுத்திய பாதரசத்தால் பல தொழிலாளர்களுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து கடந்த 2001ம் ஆண்டு மார்ச் 8 தேதி ஆலை மூடப்பட்டது. இதனை தொடர்ந்து கொடைக்கானலில் மூடப்பட்ட தெர்மா மீட்டர் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதரச கழிவுகள், கொடைக்கானல், பெரியகுளம் நீர்நிலைகளில் கலந்திருப்பதாக ஐதராபாத் நிறுவனம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டது. மேலும் நீர்நிலைகளில் 94 முதல் 165 மைக்ரோ கிராம் அளவு பாதரசம் கலந்துள்ளதாக தகவல் அளித்தது. 30 மைக்ரோ கிராமுக்கு மேல் பாதரசம் கலந்தால் மனிதனின் மூளை மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், நீர்நிலைகளில் மீன்களை பிடிப்பதை பொதுமக்கள் தவிர்க்கவும் என கூறப்பட்டிருந்தது. 

இதனைதொடர்ந்து யூனிலிவர் நிறுவனம் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. கழிவுகளை சோதனை அடிப்படையில் அகற்ற மாசு கட்டுப்பட்டு வாரியம் யூனிலிவர் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. 

இந்நிலையில் தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள பதில் மனுவில், பாதரச கழிவுகளை அகற்றும் பணி ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 18ல் முடிவடைந்தது.  பாதரசம் பரவிய 87 டன் மணலை 70 பகுதிகளாக பிரித்து கழிவுகள் அகற்றப்பட்டது. நீர் அலசல் முறை மூலமாகவும், கொதிகலன் மூலமாகவும் பாதரச கழிவு அகற்றப்பட்டதாகவும், 1 டன் பாதரசம் கலந்த மணலை 5 ஆயிரம் லிட்டர் தண்ணீரால் அலசப்பட்டது என்றும் கூறப்பட்டது. 

இந்த முறையில் பாதரசத்தின் அளவை குறைக்கமுடிந்ததே தவிர முற்றிலுமாக அகற்ற முடியவில்லை என்றும் சோதனை முறையில் பாதரசத்தை அகற்றும் பணி தோல்வி அடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பாதரசத்தை பயன்படுத்தியதால் பல தொழிலாளர்களுக்கு கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பதிலால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். 

Label