OUR CLIENTS
ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைப்பு
ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைப்பு Posted on 15-Dec-2017 ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக்  கப்பல் கடற்படையில் இணைப்பு

மும்பை, டிச.15-
நாட்டின் கடல் பகுதி பாதுகாப்பை வலிமைபடுத்தும் வகையில் இந்திய கடற்படையில் கல்வாரி என்ற நீர் மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் நேற்று (வியாழன்)  முறைப்படி கடற்படையில் இணைந்தது. பிரதமர் மோடி இந்தக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


பிரான்ஸை சேர்ந்த ‘டி.சி.என்.எஸ்’ எனும் நிறுவனத்தின்  தொழில்நுட்ப உதவியுடன் 6 ஸ்கார்பியன் வகை நீர் மூழ்கிக்கப்பல்கள் இந்தியாவில் கட்டப்ப்பட்டு வருகின்றன. முழுமையாக கட்டபட்ட 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.  இதில் ஐ.என்.எஸ். கல்வாரி  நீர்மூழ்கிக் கப்பல்  ஒன்றாகும்.

அதிநவீன தொழில் நுட்பங்கள் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை, ரேடாரால் கண்காணிக்க முடியாது. ரேடாரில் சிக்காத நவீன ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொண்டது.  இந்த கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் அதிக சப்தமின்றி பயணிக்கும் திறன் கொண்டதுடன், ஆழ்கடலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளை செலுத்தும் வசதியும் உள்ளது.  


முதல் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்கள் முடிந்து, மூன்று மாதங்களாக பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நீர்மூழ்கி நேற்று (வியாழன்) முறைப்படி கடற்படையில் இணைந்தது. மும்பையில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  

அப்போது அவர் பேசுகையில் “கடல் வழியாக நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள், போதை மருந்து கடத்தல், சட்டவிரோத மீன் பிடிப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் பேருதவியாக இருக்கும். நமது கடற்பகுதி பாதுகாப்பு அதிகரிக்கும். இந்திய கடற்படையில் இந்த கப்பல் இணைந்துள்ளதன் வாயிலாக அதன் வலிமை அதிகரித்துள்ளது” என பிரதமர் மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பட்நாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Label