OUR CLIENTS
வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டி உடலுக்கு முதல்வர் வீரவணக்கம்!
வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டி உடலுக்கு முதல்வர் வீரவணக்கம்! Posted on 15-Dec-2017 வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டி உடலுக்கு முதல்வர் வீரவணக்கம்!

சென்னை, டிச.15-
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்கள் தாக்குதலில் உயிரிழந்த சென்னை காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கொளத்தூர் நகை கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க ஆய்வாளர் பெரிய பாண்டி ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தார். அங்கு நேற்று கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெரிய பாண்டி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கிற்காக அவரது உடல் திருநெல்வேலியில் உள்ள அவரது சொந்த ஊரான சாலை புதூருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

நேற்று காலை ராஜஸ்தானில் இருந்து விமானம் மூலம் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 5-வது நுழைவு வாயில் மூலம் கொண்டு வரப்பட்ட அவரது உடல் விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பாண்டிய ராஜன், அமைச்சர் ராஜலட்சுமி, தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன்,  டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் பேண்ட் வாத்தியங்கள் இசைத்து துப்பாக்கி ஏந்தி பெரிய பாண்டிக்கு மரியாதை செலுத்தினர். துக்கம் அனுசரிக்கும் விதமாக முதல்வர் உட்பட அனைவரும் கைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்திருந்தனர். சென்னை விமான நிலையத்தில் மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்படும் அவரது உடல் அங்கிருந்து அவரின் சொந்த ஊருக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு முழு அரசு மரியாதையுடன் பெரிய பாண்டியின் உடலானது அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Label