OUR CLIENTS
ஜிஎஸ்டியால் சில்லரை பணவீக்கம் 4.88% ஆக உயர்வு
ஜிஎஸ்டியால் சில்லரை பணவீக்கம் 4.88% ஆக உயர்வு Posted on 15-Dec-2017 ஜிஎஸ்டியால் சில்லரை பணவீக்கம் 4.88% ஆக உயர்வு

புதுடெல்லி, டிச.15-
ஜிஎஸ்டியால்  சில்லரை பணவீக்கம் நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் 4.88 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் பணவீக்கம் 4 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கைக் கடந்து தற்போது பணவீக்கம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தை பணவீக்கம். அதுவும் சமீபத்தில் இந்திய பொருளாதாரத்தை ஆட்டிப் படைப்பதும் இப்பணவீக்கம் தான்.  சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு சில்லறை பணவீக்க விகிதம் சீராக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதமே 7மாத உச்சத்தில் சென்றது  சில்லறை பணவீக்கம். தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் காய்கறிகள், தானியங்கள் மற்றும் எண்ணை வித்துக்களின் விலைச்சல் குறைவாக உள்ளதால்  காய்கறிகளின் விலை உச்சத்திலேயே இருக்கும். கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை ஏற்றமானது வரும் டிசம்பர் மாதம் வரையிலும் நீடிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்தனர். சர்வதேச நிதிச் சேவைகள் நிறுவனமான, மார்கன் ஸ்டேன்லி, வரும் மாதங்களில் காய்கறிகள் மற்றும் எண்ணை வித்துக்களின் விலையானது கணிசமாக உயரும் என்று கணித்தது. காய்கறிகளின் தொடர்ச்சியான விலை ஏற்றம் மற்றும் கச்சா எண்ணை போன்றவற்றின் காரணமாக நவம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதமானது 4.5% தொடக்கூடும் என்று தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு இதே காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 3.63% சதவிகிதமாக இருந்தது. சில்லரை பணவீக்கம் நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் 4.88%மாக உயர்ந்துள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டது. கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியன பண வீக்கத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்து ள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சில்லறை பணவீக்கம் 4 சதவிகித அளவுக்குக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கைக் கடந்து தற்போது பணவீக்கம் உயர்ந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி கணிப்பின்படி பணவீக்கம் 4.20 சதவீத அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியும் தனது நிதிக் கொள்கை அறிக்கையில் அடுத்த இரண்டு காலாண்டுகளில் பணவீக்கம் 4.3 சதவீதம் முதல் 4.7 சதவிகித அளவுக்கு இருக்கும் என திருத்தி அமைத்தது. இருப்பினும் அதையும் விட தற்போது பணவீக்கம் 4.88 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதமானது 3.17% ஆக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் சற்று உயர்ந்து 3.65% ஆகவும் காணப்பட்டது. உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், அனைத்து தரப்பு மக்களுக்கும் கடுமையான பாதிக்கப் பட்டனர். இதனால் பொருட்கள் வாங்குவதை குறைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label