OUR CLIENTS
சர்வதேச அணு ஆற்றல் விற்பனை அமைப்பு இந்தியா என்.எஸ்.ஜி-ல் இணைய சீனா தொடர்ந்து எதிர்ப்பு
சர்வதேச அணு ஆற்றல் விற்பனை அமைப்பு இந்தியா என்.எஸ்.ஜி-ல் இணைய சீனா தொடர்ந்து எதிர்ப்பு Posted on 15-Dec-2017 சர்வதேச அணு ஆற்றல் விற்பனை அமைப்பு இந்தியா என்.எஸ்.ஜி-ல் இணைய சீனா தொடர்ந்து எதிர்ப்பு

புதுடெல்லி, டிச.15-
சர்வதேச அணு ஆற்றல் விற்பனை அமைப்பான என்.எஸ்.ஜி-ல் இந்தியா இணைய தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு மற்றும் ஆயுத தொழில்நுட்ப பகிர்வு அமைப்பான வாஸனார்  கூட்டமைப்பில் சமீபத்தில் இந்தியா இணைந்தது. இதன் மூலம் என்.எஸ்.ஜி எனப்படும் அணு ஆற்றல் வழங்குநர் குழுமத்தில் இந்தியா இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. என்.எஸ்.ஜி-ல் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியாவை அந்த குழுமத்தில் இணைத்துக் கொள்ள அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தனது சிறப்பு அதிகாரத்தின் மூலம் இந்தியாவை அவ்வமைப்பில் சேர விடாமல் தடுத்து கொண்டிருக்கிறது.

செய்தியாளர்கள் சந்திபின் போது பேசிய சீனா வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லு காங்க், "புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதில் ஒவ்வொரு சர்வதேச அமைப்பிற்கும் அவற்றிற்கு என தனி தனி நடை முறைகள் உள்ளன. வாஸனார்  கூட்டமைப்பில்  இந்தியா இணைந்ததால் என்.எஸ்.ஜி-ல் இந்தியாவை இணைப்பது தொடர்பான எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை. இதன் காரணமாகவே இந்தியாவை என்.எஸ்.ஜி-ல் இணைக்க தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக சீனா தெரிவித்து வருகிறது. அதே நேரம் என்.எஸ்.ஜி-ல் இந்தியாவை இணைத்தால் பாகிஸ்தானின் கோரிக்கையும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தி உள்ளது.

Label