OUR CLIENTS
பனிச்சரிவில் தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயம் :தேடும் பணி தீவிரம்!
பனிச்சரிவில் தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயம் :தேடும் பணி தீவிரம்! Posted on 15-Dec-2017 பனிச்சரிவில் தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயம் :தேடும் பணி தீவிரம்!

ஸ்ரீநகர், டிச.15-
 ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மூர்த்தி உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வடக்கு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே முன்னரங்க நிலை ஒன்றில் மூன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் 3 வீரர்களும் சிக்கினர்.
அதேபோல் குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு வீரர்கள் சிக்கினர். இந்த 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ஆனால் காணாமல் போய் இரண்டு நாள்கள் ஆகியும் அவர்களை பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

மூன்றாம் நாளான நேற்று தேடும் பணியில் பல மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கர்னல் ராஜேஸ் காளியா தெரிவித்தார். தொடர்ச்சியாக கடுமையான பனிபொழிவு இருந்த போதிலும் வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த என். மூர்த்தி என தெரியவந்துள்ளது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர்.

Label