OUR CLIENTS
மின்னணு கழிவுகளால் இந்தியாவிற்கு ஆபத்து: ஐ.நா. எச்சரிக்கை விடுப்பு
மின்னணு கழிவுகளால் இந்தியாவிற்கு ஆபத்து: ஐ.நா. எச்சரிக்கை விடுப்பு Posted on 15-Dec-2017 மின்னணு கழிவுகளால் இந்தியாவிற்கு ஆபத்து: ஐ.நா. எச்சரிக்கை விடுப்பு

புதுடெல்லி, டிச.15-
இந்தியாவில் உருவாக்கப்படும் அதிகப் படியான மின்னணு கழிவுகளினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் மக்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. பல்கலைக் கழகமானது சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் மற்றும் சர்வதேச திடக்கழிவு அசோசியேஷனுடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அதில், இந்தியாவில் சென்ற ஆண்டில் மட்டும் 2 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு தோறும் மின்னணு கழிவுகளின் எடை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்க்கேட்டினால் மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 

2018-ம் ஆண்டிற்குள் மின்னணு கழிவுகளின் எடை மூன்று மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பெரும் பான்மையான கழிவுகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகின்றன. 15 சதவீதம் கழிவுகள் மட்டுமே வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களே மின்னணு கழிவுகளில் அதிகப்படியாக காணப்படுகின்றன. 

இது இந்தியாவில் தற்சமயம் உள்ள மின்னணு கழிவு மேலாண்மையின் குறைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. தற்சமயம் பல நகரங்களில் மின்னணு கழிவு மறுசுழற்சி மையங்கள் இயங்குகின்றன. மேலும் பல இடங்களில் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் மின்னணு கழிவு மறுசுழற்சி பணிகளில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு இல்லாமல் ஏழை மக்கள் இந்த பணிகளை செய்கின்றனர்.  

சென்ற ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் வெளியேற்றப்பட்ட மின்னணு கழிவுகளின் எடை 44.7 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label