OUR CLIENTS
கங்கோத்ரி ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்தது
கங்கோத்ரி ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்தது Posted on 15-Dec-2017 கங்கோத்ரி ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்தது

உத்தரகாசி, டிச,15-
உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரியில் அதிக சுமை ஏற்றி சென்ற டிரக்கின் பளுவைத் தாங்காமல் நேற்று பாலம் உடைந்து விழுந்தது.

உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி செல்லும் வழியில் ஆற்றுப் பாலத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தின் வழியாக தான் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும்  பள்ளி குழந்தைகள் தினசரி பயணித்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் கங்கோத்ரி பாலத்தில் 2 டிரக் அதிக சுமை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சுமை தாங்காமல்  பாலம் உடைந்து விழுந்தது.இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மாநில  மஜிஸ்திரேட் ஆஷிஷ் சவுகான் தெரிவித்தார்.

இது குறித்து மஜிஸ்திரேட் ஆஷிஷ் சவுகான் கூறுகையில்,  ஒரே நேரத்தில் கங்கோத்ரி ஆற்றுப் பாலத்தின் வழியாக ஒரு டிரக் மட்டுமே செல்ல முடியும்.  ஆனால் 2 டிரக் சென்றதால் சுமை  தாங்க முடியாமல் பாலம் உடைந்து விழுந்ததுள்ளது என அவர்  கூறினார்.  இந்த பாலம் உடைந்ததால், ஏராளமான வாகனங்கள் இரு பக்கத்திலும் செல்ல முடியாமல் சிக்கி தவித்தன. மேலும் இதனால் இந்தச் சாலை மூடப்பட்டதையடுத்து வேறு வழியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Label