OUR CLIENTS
தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது அ.தி.மு.க. அழிந்து வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் அசத்தல் பேச்சு
தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது அ.தி.மு.க. அழிந்து வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் அசத்தல் பேச்சு Posted on 15-Dec-2017 தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது அ.தி.மு.க. அழிந்து வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் அசத்தல் பேச்சு

சென்னை, டிச.15-
தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது,  அ.தி.மு.க. அழிந்து வருகிறது என்று ஆர்.கே. நகர் தொகுதியில்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். 

ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் அந்த தொகுதி தத்தெடுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் ஆர்.கே.நகர் தொகுதி வந்து விடும்.

தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் நான் மட்டும்தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் மூலம் ரூ.1லு லட்சம் கோடி திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்து ள்ளது. பா.ஜனதா வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கிடைத்தால் தமிழகத்துக்கு இன்னும் எவ்வளவு வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள் என கூறினார். 

மேலும் அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறி. இந்த ஆட்சி சாயும் கோபுரம் போல உள்ளது. சாயும் கோபுரம் எவ்வளவு நாள் நிற்கும், எப்போது கீழே விழும் என்பதை சொல்ல முடியாது. அதே போல்தான் அ.தி.மு.க. ஆட்சி எத்தனை நாள் நிற்கும், எப்போது கீழே விழும் என்பதை உறுதியாக கூற முடியாது.தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது. அ.தி.மு.க. அழிந்து வருகிறது என கூறினார்.

Label