OUR CLIENTS
ராமர் பாலம் மதிக்கப்படவேண்டும் :அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு
ராமர் பாலம் மதிக்கப்படவேண்டும் :அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு Posted on 15-Dec-2017 ராமர் பாலம் மதிக்கப்படவேண்டும் :அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

புதுடெல்லி, டிச.15-
ராமேசுவரம் அருகே பாம்பனில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரம் வரை ராமர் பாலம் அமைந்துள்ளது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. இது இந்து மதத்தினரின் நம்பிக்கையாகவும் உள்ளது.

இதை உறுதி செய்வது போல, அமெரிக்க டெலிவிஷனில் அறிக்கை ஒன்று சில நாட்கிளுக்கு முன் வெளியாகி  இருந்தது. அதில், ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமெரிக்க விஞ்ஞானிகள், ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப் பட்டது தான் என கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, ராமர் பாலம், கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகள் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், ரெயில்வே மந்திரியுமான பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில், காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன், “ராமரை கடவுள் என பாரதீய ஜனதா நம்புகிறது. ராமர் பாலம் மதிக்கப்பட வேண்டும். அதில் பல கோடி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதை சேதப்படுத்தி விடக்கூடாது” என்று கூறினார்.

Label