OUR CLIENTS
ஜிஷா கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை! :எர்ணாகுளம் நீதிமன்றம் அசத்தல் தீர்ப்பு
ஜிஷா கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை! :எர்ணாகுளம் நீதிமன்றம் அசத்தல் தீர்ப்பு Posted on 15-Dec-2017 ஜிஷா கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை! :எர்ணாகுளம் நீதிமன்றம் அசத்தல் தீர்ப்பு

திருவனந்தபுரம், டிச.15-
கேரளா சட்ட மாணவி ஜிஷாவை பலாத்காரம் செய்து கொன்ற அஸ்ஸாமை சேர்ந்த கொலையாளி அம்ரூல் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவின் பெரும் பாவூரைச் சேர்ந்தவர் ஜிஷா. சட்டமாணவியான ஜிஷா வீட்டில் தனியாக இருந்த போது அவர் பலாத்காரத்துக்குள்ளாக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக நடத்தபட்ட விசாரணையில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அஸ்ஸாமைச் சேர்ந்த கொலையாளி அம்ரூல் இஸ்லாமை போலீசார் கைது செய்தனர். 
இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஓராண்டாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கொலையாளி அம்ரூல் இஸ்லாம் குற்றவாளி என நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. நேற்று அம்ரூல் இஸ்லாமுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

Label