OUR CLIENTS
ஆர்.கே நகர் தேர்தலை நேரடியாக ஒளிபரப்பக் கோரி திமுக மனு
ஆர்.கே நகர் தேர்தலை நேரடியாக ஒளிபரப்பக் கோரி திமுக மனு Posted on 15-Dec-2017 ஆர்.கே நகர் தேர்தலை நேரடியாக ஒளிபரப்பக் கோரி திமுக மனு

சென்னை, டிச.15
ஆர்.கே நகர் தேர்தலை இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. 

ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகின்றன. ஆர்.கே.நகர் தேர்தல் முறையாக, நேர்மையாக நடக்க வேண்டும் என தி.மு.க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது. என பணப்பட்டுவாடா புகார், போலி வாக்காளர்களை நீக்குதல் என பல புகார்களை அளித்துள்ளது. இந்நிலையில், ஆர்.கே நகர் தேர்தலை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவை அளித்துள்ளது. அதில், "அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை வெப் காஸ்டிங் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அனைத்து தெருக்களின் இரு எல்லையிலும் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும். அது  24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் ராணுவப் படையினர் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலான துணை 

ராணுவ படையினரை அனுப்பி வைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் ஆர்.கே. நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்டவை நடைபெறும். மேலும் , இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Label