OUR CLIENTS
‘பிட்காயின்’ பரிமாற்றம் குறித்து வருமான வரி இலாகா சோதனை!
‘பிட்காயின்’ பரிமாற்றம் குறித்து வருமான வரி இலாகா சோதனை! Posted on 15-Dec-2017 ‘பிட்காயின்’ பரிமாற்றம் குறித்து வருமான வரி இலாகா சோதனை!

புதுடெல்லி, டிச.15-
பிட்காயின் என்பது இணைய வழி பணம். இதை ஒருவர் இணையதள ‘வாலட்’டில் அமெரிக்க டாலர்களாகவோ, யூரோவாகவோ செலுத்தி வாங்க முடியும். ஒரு அமெரிக்க டாலர் யூக மதிப்பின் அடிப்படையில் ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு தற்போது சுமார் ரூ.11 லட்சத்து 11 ஆயிரம் ஆகும்.

சமீபகாலமாக இந்தியாவில் பெரும் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பிட்காயினை அதிக அளவில் இணையதளம் வழியாக பரிமாற்றம் செய்து வருவதாக வருமான வரி இலாகாவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, குர்கான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வருமான வரி அதிகாரிகள் பெங்களூரு பிரிவு வருமான வரித்துறையின் உதவியுடன் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். பணப்பரிமாற்றம் செய்து தரும் 9 நிறுவனங்களின் அலுவலகத்தில் இந்த சோதனை நடந்தது.

Label