OUR CLIENTS
ஆர்.கே.நகரில் குக்கருக்கு டோக்கன் வழங்குவதாக தகவல் :ராயபுரம் பாத்திரக்கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை
ஆர்.கே.நகரில் குக்கருக்கு டோக்கன் வழங்குவதாக தகவல் :ராயபுரம் பாத்திரக்கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை Posted on 15-Dec-2017 ஆர்.கே.நகரில் குக்கருக்கு டோக்கன் வழங்குவதாக தகவல் :ராயபுரம் பாத்திரக்கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை, டிச.15-
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர் வழங்குவதற்கான டோக்கன் கொடுப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் ஒரு பாத்திரக்கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அ.தி.மு.க.வின் ஒரு அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன் இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். இவர் தனது பலத்தை  நிரூபிக்க வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வாக்காளர்களுக்கு குக்கர் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் பரவியது. இதன் அடிப்படையில், ராயபுரத்தில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் அதிகாரிகள் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.  கடையில் உள்ள இருப்பு விவரம் மற்றும் கொள்முதல் குறித்த விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

Label