OUR CLIENTS
அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை : தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை : தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் Posted on 15-Dec-2017 அரசு ஊழியர்களுக்கு  ரூ.7 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை :  தொழிலாளர்கள் காத்திருப்பு  போராட்டம்

நெல்லை, டிச.15-
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 7 ஆயிரம் கோடி ரூபாயை உடனடி வழங்க வேண்டும் என தூத்துக்குடி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 16 மாதங்களில் 9 முறை ஊதிய உயர்வு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால், தமிழக அரசு இதுவரை முழுமையான தீர்வு தரவில்லை. குறிப்பாக, தமிழக போக்குவரத்து கழகங்களில் வருடத்திற்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை, அரசின் நடைமுறை செலவுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். 

மத்திய, மாநில பணியாளர்களுக்கு வழங்குவது போல் சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை. இதனால், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, அரசு போக்குவரத்து மண்டல தலைமையகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்கள் சுமார் 500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Label