OUR CLIENTS
பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெறாத வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் எச்சரிக்கை
பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெறாத வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் எச்சரிக்கை Posted on 15-Dec-2017 பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெறாத வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் எச்சரிக்கை

வேலூர், டிச.15-
வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 31-க்குள் (31.12.2017) பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெறாத உணவு பொருட்கள் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் சி.அ.ராமன் எச்சரிக்கை                                                                                                                                          விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் அமலில் உள்ளது.  பழைய 
சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வந்த உரிமத்தை தற்போது புதிய சட்டத்தில்  உணவு பாதுகாப்பு துறை வழங்குகிறது.   ஏற்கனவே உணவுப் பொருட்கள்  வியாபாரிகளுக்கு  பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய  கால  அவகாசம்  வழங்கப்பட்டுவிட்டதால் வியா பாரிகள்  அவர்களுடைய விற்பனை கொள்முதல் தொகைக்கு ஏற்ப 
உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி உரிமம் 
அல்லது   பதிவு பெற வேண்டிய உணவு  உற்பத்தியாளர்கள்,  மொத்த விற்பனையாளர்கள்  வினியோகஸ்தர்கள்,  சில்லரை விற்பனை யாளர்கள் மற்றும் உணவுப் பொருள்களை கொண்டு  செல்லும் வாகனங்களுக்கு அனைவரும் தங்கள் பகுதி  உணவு  பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது  மாவட்ட  நியமன அலுவலரிடமோ பதிவு  அல்லது   உரிமம் சான்றிதழ்  பெற்றுக்கொள்ளவேண்டும்.                                                                                                                                  வருடத்திற்கு ரூ.12  லட்சத்திற்குள் வியாபாரம் செய்பவர்கள்   உரிய ஆவணங்களுடன்  உணவுப் பாதுகாப்பு அலுவரிடம் நேரிலோ அல்லது   தபாலிலோ சமர்ப்பிக்க    வேண்டும் அல்லது அருகில்   உள்ள  பொது   சேவை   மையம் மூலம்   பதிவேற்றம் செய்து பதிவுச்சான்றிதழ்   பெற்றுக்கொள்ள   வேண்டும்.   வருடத்திற்கு   ரூ.12   லட்சடத்திற்கு மேல் வியாபாரம்   செய்பவர்களுக்கு   உரிமக்கட்டணமாக சில்லரை  விற்பனையாளருக்கு   ஆண்டுக்கு  ரூ.200-மும்,  தயாரிப்பாளர்கள்  உற்பத்தி நாள்   ஒன்றுக்கு  ஒரு  மெட்ரிக்  டன்னுக்கு உட்பட்டதாக    இருந்தால் ரூ.3,000-மும்,  ஒரு  மெட்ரிக் டன்னுக்கு மேல் இருந்தால் ரூ.5,000- மும் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி தங்களின்  விவரங்களை இணையதளத்தில்  பதிவேற்றம்  செய்த  ஆவணங்கள் மற்றும்  விண்ணப்பம்  அசல்  மற்றும் நகல் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ  அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க  வேண்டும்.                   
                                                                                                                         விவரங்களுக்கு நியமன   அலுவலர்,   மாவட்ட உணவுப்பாதுகாப்பு  துறை,  ஙி--பிளாக்,  2வது மாடி,  மாவட்ட ஆட்சியர்  வளாககத்தில்  உள்ள  மாவட்ட  அலுவலகத்தை   தொடர் கொண்டு அனைத்து  உணவு வியாபாரிகளும்   பதிவு சான்று   அல்லது உரிமம் பெற்றுக்  கொள்ளவேண்டும்.   ஏற்கனவே  பதிவு  மற்றும்   உரிமம்  உள்ளவர்கள் தங்களது  பதிவு   மற்றும்  உரிமத்தினை   காலாவதியாவதற்கு   முன்பே  புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  அவ்வாறு  புதுப்பிக் கொள்ளும் பட்சத்தில்  அவர்கள்   தங்கள்  உணவுப் பொருட்களின்  பொட்டலத்தில்  அச்சிட்டுள்ள அதே  பதிவு   மற்றும்  உரிமம்    எண் பெறுவதோடு  அபராதத் தொகையையும்  தவிர்க்கலாம்  என்று  எச்சரிகை  செய்யப் பட்டு உள்ளது.                                                                                                                                              மேலும்  மாவட்டத்தில்   உணவுப்பொருட்கள்  வியாபாரிகள்   வரும்  31.12.2017-க்குள்    பதிவு மற்றும்  உரிம சான்றிதழ்   எடுக்க     அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறினால்   01.01.2018   முதல்   உணவுப்பாதுகாப்பு சட்டம்   2006   பிரிவு  63-ன்  படி  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்று  வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.அ.ராமன் எச்சரிக்கை                                                                                                                                          விடுத்துள்ளார்.

Label