OUR CLIENTS
உடலுக்கு வெளியில் இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைப்பு!!
உடலுக்கு வெளியில் இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைப்பு!! Posted on 15-Dec-2017 உடலுக்கு வெளியில் இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைப்பு!!

லியிசெஸ்டர், டிச.15-
இங்கிலாந்தில் உடலுக்கு வெளியில் இதயத்துடன் பிறந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லியிசெஸ்டர் நகரில் உள்ள கிளின்பீல்ட் மருத்துவமனையில், வன்னிலோப் என்னும் பெயருடைய குழந்தை 'எக்டோபியா கோர்ட்டிஸ்' என்றழைக்கப்படும் அரிதான நோயுடன் பிறந்தது. உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு மருத்துவர்கள் செய்த இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை  சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி பிண்ட்லே (31).  நயோமி கர்ப்பமாக இருந்த போது, அவரின் ஒன்பது வார கர்ப்பத்தின் மருத்து ஸ்கேனில் வயிற்றில் 
இருந்த குழந்தையின் இதயம் வெளிப்பகுதியில் இருப்பது கண்டுப் பிடிக்கப் பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நயோமிக்கு கிளின்பீல்ட் மருத்துவமனையில் சிசேரின் மூலம் பெண் குழந்தை பிறந்தது.  ஸ்கேனில் தெரிந்தபடி குழந்தையின் இதயம் முழுவதும் 
உடலின் வெளிப்பகுதியில் இருந்தது. பிழைக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில் இக்குழந்தைக்கு  மருத்துவர்கள் சில முக்கிய ஆப்ரேஷன்கள் செய்து உயிர் பிழைக்க வைத்துள்ளார்கள்.தற்போது குழந்தையின் இதயம் மார்பின் உள்ளே  வைக்கப்பட்டுள்ளது. 

உலகில் பிறக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளில் 5லிருந்து 8 குழந்தைகள் இதயம் வெளியில் இருக்கும் பிரச்சனை கொண்டு பிறப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Label