OUR CLIENTS
ஆசியாவின் மிக கவர்ச்சியான ஆண்!
ஆசியாவின் மிக கவர்ச்சியான ஆண்! Posted on 15-Dec-2017 ஆசியாவின் மிக கவர்ச்சியான ஆண்!

லண்டன், டிச.15-
ஆசிய அளவில் மிகவும் கவர்ச்சியான ஆணாக இந்தி நடிகர் ஷாகித் கபூர்(36) தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

லண்டனை சேர்ந்த வார பத்திரிகையான ஈஸ்டர்ன் ஐ ஆண்டுதோறும் ஆசிய அளவில் கவர்ச்சியான 50 ஆண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆசியாவின் கவர்ச்சியான ஆண்கள் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்தவர்களின் தகவல்கள்  வெளியிடப்பட்டது. மீதமுள்ளவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் நடத்திய வாக்கெடுப்பில் ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான ஆணாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏழாவது இடத்தில் இருந்த அவர் இந்த ஆண்டு முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அவர் இதே இடத்தில் நீடிக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்து வந்த பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட இங்கிலாந்து பாப் இசை பாடகர் சயான் மாலிக் இந்த ஆண்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே இந்தி தொலைக்காட்சி நடிகர்கள் விவான் தேஸ்னா (தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட மதுபாலா தொடரில் நடித்தவர்) மற்றும் ஆஷிஷ் ஷர்மா(தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அழகிய லைலா தொடரில் நடித்தவர்) ஆகியோர் பிடித்துள்ளனர். ஆறாவது இடத்தை ஃபவத் கான் பெற்றுள்ளார். ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவால் மட்டுமே தன்னால் முதலிடத்தை பிடிக்க முயன்றதாக நடிகர் ஷாகித் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதேபோல் இந்த ஆண்டிற்கான கவர்ச்சியான  50 ஆசிய பெண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்திருந்தார். தொடர்ந்து 5-வது ஆண்டாக அவர் முதல் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Label