OUR CLIENTS
ஜனநாயகத்துக்கு விரோதமானது :அமெரிக்க தூதர் சாடல் :பத்திரிகையாளர்கள் கைது மியான்மர் அரசு அட்டூழியம்!
ஜனநாயகத்துக்கு விரோதமானது :அமெரிக்க தூதர் சாடல் :பத்திரிகையாளர்கள் கைது மியான்மர் அரசு அட்டூழியம்! Posted on 15-Dec-2017 ஜனநாயகத்துக்கு விரோதமானது :அமெரிக்க தூதர் சாடல் :பத்திரிகையாளர்கள் கைது மியான்மர் அரசு அட்டூழியம்!

மியான்மர், டிச.15-
பத்திரிகையாளர்கள் இருவர் சட்டவிரோதமாக செய்தி சேகரிக்க முயற்சித்ததாகக் கூறி மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந் நிலையில், சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் குவிந்துள்ளன. 

சர்வதேச ஊடக நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனமும் தனது செய்தியாளர்களை அங்கு அனுப்பி செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, அதன் பத்திரிகையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  "சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அவற்றை வெளிநாட்டிற்கு அனுப்பியதால் வா லோன் (கீணீ லிஷீஸீமீ) மற்றும் யாவ் சோய் ஊ (ரிஹ்ணீஷ் ஷிஷீமீ ளிஷீ) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக இருந்த ஒரு காவலரும் கைது செய்யப் பட்டுள்ளார்" என மியான்மர் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பத்திரிகை யாளர்களை சர்வதேச சட்டத்தின்படி நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்ந £ட்டுக்கான அமெரிக்க தூதர், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Label