OUR CLIENTS
திருமண ஆல்பத்தை விற்பனை செய்யும் விராட் கோலி!
திருமண ஆல்பத்தை விற்பனை செய்யும் விராட் கோலி! Posted on 15-Dec-2017 திருமண ஆல்பத்தை விற்பனை செய்யும் விராட் கோலி!

புதுடெல்லி, டிச.15&
இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலியில்  சில தினத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண ஆல்பத்தை விற்பனை செய்கிறார் விராட் கோலி. அதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை அறக்கட்டளைக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலியில்  சில தினத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மிக காஸ்ட்லியான ஹோட்டலில் நடந்த அந்த திருமணத்தில் முக்கியமனாவர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
உலக அளவு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக கோலி திகழ்வதினால் அவரது கல்யாணம் பற்றிய தகவலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருமணத்தில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை மட்டுமே இதுவரை வெளியிட்டுள்ளனர். முழுமையான ஆல்பம் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த போட்டோக்களை  அமெரிக்க இதழுக்கு விற்க கோலி- அனுஷ்கா ஷர்மா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதைவிற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை அறக்கட்டளைக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுமண தம்பதியின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

Label