OUR CLIENTS
பிரிமீயர் லீக்கில் தொடர்ச்சியாக 15 வெற்றிகள் மான்செஸ்டர் சிட்டி சாதனை
பிரிமீயர் லீக்கில் தொடர்ச்சியாக 15 வெற்றிகள் மான்செஸ்டர் சிட்டி சாதனை Posted on 15-Dec-2017 பிரிமீயர் லீக்கில் தொடர்ச்சியாக 15 வெற்றிகள்  மான்செஸ்டர் சிட்டி சாதனை

 இங்கிலாந்து, டிச. 15-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று மான்செஸ்டர் சிட்டி அணியின் சாதனை நீடித்துக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தொடர் பிரிமீயர் லீக். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் இதுவும் ஒன்று.  நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான மான்செஸ்டர் சிட்டி அணி ஸ்வான்சி அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4&0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது.  இதற்கு முன் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்றது கிடையாது. 

கடந்த வாரம் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2&1 என வீழ்த்தியதன் மூலம் தொடர்ந்து 14 வெற்றிகள் பெற்று சாதனைப் படைத்திருந்தது. தற்போது அந்த சாதனை நீண்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 1888-ம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரை எந்வொரு அணியும் தொடர்ந்து இத்தனை வெற்றிகளை பெற்றது கிடையாது.  மேலும், இந்த சீசனில் தோல்வியடையாமல் 16 வெற்றி ஒரு டிராவுடன் வீறுநடை போடுகிறது. இதற்கு முன் டோட்டன்ஹாம் அணி 1960&61 சீசனில் 15 வெற்றி ஒரு டிரா என தோல்வியை சந்திக்காமல் சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் குவார்டியோலா, ஜெர்மனி கிளப் அணியான பேயர்ன் முனிச் அணிக்கு 2013&14-ல் பயிற்சியாளராக இருந்தபோது, அந்த அணி தொடர்ந்து 19 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

Label