OUR CLIENTS
தென் சூடான் வன்முறை 170 பேருக்கும் மேல் பலி
தென் சூடான் வன்முறை 170 பேருக்கும் மேல் பலி Posted on 15-Dec-2017 தென் சூடான் வன்முறை 170 பேருக்கும் மேல்  பலி

ஜுபாவின், டிச.15-
தென் சூடானில் கடந்த வாரம் இரு கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 170க்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு நாடாளுமன்ற உறுப்­பி­னர்­ மபோர் டெனி (விணீதீஷீக்ஷீ ஜிமீஸீஹ்) தெரிவித்துள்ளார். 

தலை­நகர் ஜுபாவின் வட­மேற்கே சுமார் 250 கிலோ­மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு ஏரிக்கரைப் பிராந்­தி­யத்தில் இரு கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் 170 பேர் உயிரிழந்ததோடு 200 பேர் வரையில் படுகாய­ம் அடைந்துள்ளனர். 342 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது, சுமார் 1,800 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வன்­முறை மோதல்­க­ளை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்தில் அவசரகால நிலைமையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.இதே போல் கடந்த 2013ம் ஆண்டும் இடம்பெற்ற ஒரு மோதலில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்ததாக ஐ.நா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  
2011ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் பிரிந்து சென்றது.

அது பின்னர் அங்கு இனம் மற்றும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக வன்முறைகள் வெடித்தன. ஆப்பிரிக்க யூனியன் மற்றும் வெளி நாடுகள் மேற்கொண்ட சமாதான முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளன. இதனால் இங்கு தொடர்ந்து வன்முறைகள் வெடித்தவண்ணமே உள்ளது.

Label